உலக செய்திகள்

சீனாவில் தொழிற்சாலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சீனாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட மூச்சு திணறல் பாதிப்பில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

ஷிஜியாஜுவாங்,

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் பாவோடிங் நகரில் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இதில், பணிபுரிந்து வந்த தொழிலாளர்களில் ஒருவர் தண்ணீர் செல்லும் குழாயில் ஆய்வு செய்துள்ளார்.

இந்த நிலையில், திடீரென அவருக்கு மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். இதனை கண்ட அவரது சக தொழிலாளர்கள் ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

இந்த முயற்சியில் பலர் மயக்கமடைந்தனர். இதுவரை மொத்தம் 6 தொழிலாளர்கள் மூச்சு திணறல் பாதிப்பில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்