உலக செய்திகள்

காபூல் விமான நிலையத்தில் ராக்கெட் குண்டுகள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் ராக்கெட் குண்டுகள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையம் அருகே ஆறு ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மாட்டிஸ் ஆப்கானிஸ்தான் சென்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் உள்ள ராணுவ பிரிவு அருகே ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன எனவும் இந்த தாக்குதலால் எந்த வித சேதமும் ஏற்படவில்லை., எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் ஆப்கானிஸ்தான் உள்துறை மந்திரி ரஜீப் தனீஷ் தெரிவித்தார்.

காபூல் மாவட்டத்தில் உள்ள டே சப்ஸ் பகுதியில் இருந்து ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டு இருக்கலாம் என்று காபூல் விமான நிலைய தலைவர் யாகூப் ரசோலி தெரிவித்துள்ளார். உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.36 மணிக்கு இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

விமானப்படையின் மேற்கூரை மற்றும் ஒரு ஹெலிகாப்டர் முற்றிலும் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, காபூல் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று ஆப்கான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்