Photo Credit: AP 
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 1,400ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் குனார் என்ற மாகாணம் உள்ளது. இது பாகிஸ்தானை ஒட்டிய பகுதியாகும். இது பெரும்பாலும் மலைகள் நிறைந்த இடமாகும்.இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்டவை .   நேற்று முன்தினம் இரவு 11.47 மணிக்கு குனார் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இரவில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால்  ஆயிரக்கணக்கானவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 1,400 ஐ தாண்டியுள்ளது. 3,214க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து இருப்பதாகவும், 5,400 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாகவும் தாலிபான் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார்

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்