சிபேர்கான்,
ஆப்கானிஸ்தானின் வடக்கு ஜவ்சான் மாகாணத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். இதில் 7 பாதுகாப்பு படையினர் உட்பட 9 தீவிரவாதிகள் அடங்குவர்.
இந்த சம்பவம் அங்குள்ள ஜவ்சான் மாகாணத்தில் உள்ள சோதனை சாவடியில் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.