* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் சகோதரி அலீமா கானும் உள்ளிட்ட 44 முக்கிய பிரமுகர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் பினாமி சொத்துகள் இருப்பதாக மத்திய புலனாய்வு படையினர் (எப்.ஐ.ஏ.), சுப்ரீம் கோர்ட்டில் பட்டியல் அளித்துள்ளனர்.
* வங்கதேசத்தில் அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்கான வயது வரம்பை 30-ல் இருந்து 35 ஆக உயர்த்தக்கோரி இளைஞர்கள் டாக்காவில் கூடி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
* ஈராக் நாட்டின் மொசூல் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
* சிரியாவில் அலெப்போ நகரத்தில் ஜபாத் அல் நுஸ்ரா பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பெண் சிக்கி படுகாயம் அடைந்தார்.