கீவ்,
உக்ரைனின் தலைநகர் கீவ்வில் இருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகரிவில் உள்ள பேக்கரி தொழிற்சாலை மீது வெடிகுண்டுகள் வீசி ரஷியா நடத்திய தாக்குதலில் சிக்கி குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக நாட்டின் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
ரஷியா நடத்தில் குண்டுவீச்சு தாக்குதலின் போது சுமார் 30 பேர் பேக்கரி பகுதியில் இருந்ததாக டெலிகிராமில் மீட்புப் பணியாளர்கள் செய்தி வெளியிட்டனர். சிறிது நேரத்திற்குப் பிறகு கூடுதல் விவரங்கள் எதுவும் வழங்கப்படாமல் செய்தி நீக்கப்பட்டது. மேலும் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரை மீட்டுள்ளதாக அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தன்று பேக்கரி இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.