உலக செய்திகள்

பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வரும்.

பாரீஸ்,

உலக அளவில் சிறுவர்கள் ஸ்மார்ட் போன்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

இச்சட்டத்தின் படி 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இனி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. தற்போது இந்த சட்டமானது, செனட் சபை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வரும்.

இது தவிர, உயர்நிலைப்பள்ளிகளிலும் மொபைல் போன் பயன்படுத்த முழுமையாக தடை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக இத்தகைய கடுமையான சட்டத்தைக் கொண்டு வரும் 2-வது நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்