கோப்புப்படம் 
உலக செய்திகள்

புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக எங்கள் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் - பயோன்டெக் நிறுவனம் நம்பிக்கை

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக எங்கள் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் என்று பயோன்டெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

பெர்லின்,

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசிக்கு உலகிலேயே முதன் முதலில் இங்கிலாந்து தான் ஒப்புதல் வழங்கியது. அங்கு கடந்த 8 ந்தேதி முதல் மக்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது ஒட்டுமொத்த உலகையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக தங்களது தடுப்பூசி வேலை செய்யும் என்று பயோன்டெக் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி உகுர் சாஹின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் எங்கள் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு ஆற்றல் புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் சோதனை செய்யப்பட்டால் மட்டுமே நாங்கள் அதை உறுதியாக அறிவோம். சோதனையின் தரவுகளை பெறுவதற்கு இப்போதிலிருந்து சுமார் 2 வாரங்கள் தேவைப்படும் எனக் கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்