உலக செய்திகள்

பிரேசிலில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடுவதற்கு இடைக்கால தடை விதிப்பு

பிரேசிலில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை கர்ப்பிணி பெண்கள் போட்டுக் கொள்ள அந்நாட்டு அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.

பிரேசிலியா,

கொரோனா தொற்றால் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்த பிரேசில் நாட்டில், தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த நாட்டில் அஸ்ட்ரா ஜெனகா, சினோவாக் மற்றும் பைசர் ஆகிய 3 நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணி பெண் ஒருவர், அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு வலிப்பு நோய் ஏற்பட்டு கடந்த 10 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவே காரணம் என கூறப்படுகிறது. உயிரிழந்த பெண் 23 வார கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

பிரேசிலில் வேறு எந்த கர்ப்பிணி பெண்களுக்கும் இது போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் இது குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்பதால், பிரேசில் நாட்டில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அங்கு பயன்பாட்டில் இருக்கும் மற்ற தடுப்பூசிகளை கர்ப்பிணி பெண்கள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்