லண்டன்,
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இங்கிலாந்தில் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளதால் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே பைசர் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி போடும் பணியும் தொடங்கியுள்ளது. பிரைன் பிங்கர் என்ற 82-வயது நீரிழிவு நோயாளிக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி முதலாவது போடப்பட்டது.