கோப்புப்படம் 
உலக செய்திகள்

உலகம் முழுவதும் 50.11 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு..!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45.09 கோடியாக அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

ஜெனிவா,

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50.11 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50.11,13,443 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 45,09,59,851 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,39,43,972 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 62,09,620 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 8,21,33,342, உயிரிழப்பு - 10,13,044, குணமடைந்தோர் - 8,00,15,081

இந்தியா - பாதிப்பு - 4,30,37,388, உயிரிழப்பு - 5,21,746, குணமடைந்தோர் - 4,25,04,329

பிரேசில் - பாதிப்பு - 3,01,83,929, உயிரிழப்பு - 6,61,552, குணமடைந்தோர் - 2,91,26,303

பிரான்ஸ் - பாதிப்பு - 2,71,63,629, உயிரிழப்பு - 1,43,625, குணமடைந்தோர் - 2,43,44,051

ஜெர்மனி - பாதிப்பு - 2,29,36,514, உயிரிழப்பு - 1,32,599, குணமடைந்தோர் - 1,88,93,100

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

இங்கிலாந்து - 2,16,79,280

ரஷியா - 1,80,18,825

தென்கொரியா - 1,58,30,644

இத்தாலி - 1,54,04,809

துருக்கி - 1,49,72,502

ஸ்பெயின் - 1,16,62,214

வியட்நாம் - 1,02,72,964

அர்ஜெண்டீனா - 90,56,203

நெதர்லாந்து - 80,01,830

ஈரான் - 71,97,505

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்