உலக செய்திகள்

கொரோனா பாதிப்புகள்; ஆஸ்திரேலியாவின் கேன்பெர்ராவில் 4 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவில் கேன்பெர்ரா நகரில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு 4 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

கேன்பெர்ரா,

ஆஸ்திரேலியாவின் கேன்பெர்ரா நகரில் கடந்த ஆகஸ்டு 12ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்புகள் குறையாத நிலை காணப்படுகிறது.

ஒரே இரவில் 22 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இதனால், கூடுதலாக ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனை முதல் மந்திரி ஆண்ட்ரூ பார், சுகாதார மந்திரி ரச்சேல் ஸ்டீபன் உடன் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

இதன்படி, பொது சுகாதார உத்தரவுகளில் சில சிறிய திருத்தங்களை மேற்கொண்டு வருகிற அக்டோபர் 15ந்தேதி வரை (வெள்ளி கிழமை) 4 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்