உலக செய்திகள்

வெளிநாடுகளுக்கும் பரவும் கொரோனா வைரஸ் தாக்குதல்

வெளிநாடுகளுக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்,

சீனாவில் இருந்து செல்லும் பயணிகள் மூலம் பல வெளிநாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் 30 வயது நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது 2-வதாக சிகாகோ நகரில் 60 வயது பெண்ணுக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 13-ந் தேதி அவர் சீனாவில் இருந்து வந்தபோது நன்றாக இருந்தார். ஆனால் 4 நாட்களுக்கு பின்னர் பாதிப்பு தெரியவந்ததும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பாவில் முதல் முறையாக பிரான்ஸ் நாட்டில் 3 பேருக்கு வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் சீனா சென்றுவந்தவர்கள், மற்றொருவர் அவர்களது உறவினர்.

ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக, சீனாவில் இருந்து ஒரு வாரத்துக்கு முன்பு மெல்போர்ன் நகருக்கு வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டது.

நேபாள நாட்டிலும் முதலாவது கொனோரா வைரஸ் தாக்குதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். இவர் சீனாவில் படித்துவரும் நேபாள மாணவர். மலேசியாவிலும் 3 வைரஸ் தாக்குதல் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை