வாஷிங்டன்,
ரஷியாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க பரிசீலித்து வருவதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது.
அதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. பீப்பாய்க்கு 139.13 டாலர் என்ற நிலையை எட்டியது. பின்னர் சற்று தணிந்து 130.29 டாலர் ஆனது. இருப்பினும், ஒரே நாளில் 12 டாலர், அதாவது 10 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை 145 டாலராக இருந்தது. அதன்பிறகு அதிகபட்ச அளவை தற்போது எட்டி இருக்கிறது. அமெரிக்க கச்சா எண்ணெய் விலையும் நேற்று 125 டாலராக உயர்ந்தது. இதுபோல், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பங்குச்சந்தைகளில் சரிவு காணப்பட்டது. உலக அளவில் தங்கம் விலை உயர்ந்தது.