உலக செய்திகள்

ஊரடங்கை தவிர்க்க தடுப்பூசியுடன் மாஸ்க் அணிவதையும் கடைபிடிக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு பிரதிநிதி

டெல்டா வகை கொரோனா பாதிப்பால் ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

டெல்டா பிளஸ் பரவத்தொடங்கியிருக்கும் சூழலில், தடுப்பூசியுடன் மாஸ்க் அணிதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுதல் அவசியம் என்று உலக சுகாதார அமைப்பின் ரஷ்யாவுக்கான பிரதிநிதி மெலிடா வுஜ்னோவிக் தெரிவித்துள்ளார்.

யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வுஜ்னோவிக் மேலும் கூறுகையில், டெல்டா வகை கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி மட்டும் போதாது என்பதால் நாம் மாஸ்க் அணிவதையும் கடைபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இல்லாவிடில் மீண்டும் ஊரடங்குதான் தேவைப்படும். தொற்றின் தீவிரத்தன்மையையும் பரவும் தன்மையையும் குறைப்பதால் தடுப்பூசி போடுவது அவசியம் என்றார்.

டெல்டா வகை கொரோனா கவலைக்குரிய திரிபு என உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது. டெல்டா வகை கொரோனா பாதிப்பால் ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்