உலக செய்திகள்

யூடியூப் பார்த்து விமானம் உருவாக்கி அசத்திய இந்திய வம்சாவெளி குடும்பம்..!

யூடியூப் பார்த்து விமானம் ஒன்றை உருவாக்கி இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த குடும்பம் அசத்தியுள்ளது.

தினத்தந்தி

லண்டன்,

கொரோனா ஊரடங்கு காலத்தில் யூடியூப் பார்த்து 4 பேர் பயணிக்கும் வகையிலான விமானம் ஒன்றை உருவாக்கி இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியவம்சாவளியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று அசத்தியுள்ளது.

பயிற்சி பெற்ற விமானியான அசோக் மற்றும் அவரது மனைவி அபிலாஷா இருவரும் விமானம் ஒன்றை வாங்க விரும்பியுள்ளனர். ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற விமானத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களுக்கு விருப்பமான வகையில் விமானத்தை தாங்களே உருவாக்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் விமானத்திற்கான பாகங்களை தென்ஆப்பிரிக்காவில் இருந்து வாங்கியுள்ளனர்.

இதையடுத்து விமானம் தயாரிக்கும் வழிகாட்டுதல் கையேடு மற்றும் யூடியூப் வீடியோக்களின் உதவியுடன் அசோக்கும் அவரது மனைவியும் தங்களது விருப்பத்திற்கேற்ற வகையில் 4 பேர் பயணிக்கும் வகையிலான விமானத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்