கான்பெர்ரா,
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து, டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் வணக்கம் என்பதை இந்தி மொழியில் கூறி தனது வாழ்த்தினை தொடங்கும் ஸ்காட் மாரிசன் தீப ஒளி திருநாளை, தாம் எப்போதும் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொருவரோடும் பகிர்ந்து கொள்ளும் மதிப்பையும், நம்பிக்கையையும் கொண்டாடுவதால், தீப ஒளி திருநாளை தாம் எப்போதும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.