காபூல்,
ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹெல்மண்ட் மாகாணத்தின் லஷ்கரா நகரில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 போலீசார் படுகாயமடைந்தனர்.
ஈரானுடனான எல்லையில் உள்ள பரா மாகாணத்தில் உள்ள அபு நாசர் பராஹி சோதனைச் சாவடியை தலிபான்கள் கைப்பற்றியதாக வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனைத்தொடர்ந்து காந்தஹார் நகரில் ஆப்கானிஸ்தான் படைகளும், தலிபான் போராளிகளும் மோதிக்கொண்டனர்.
இது நேட்டோ படைகள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் விரைவான முன்னேற்றத்தை தொடர்வதில் தலீபான்கள் தீவிரம் காட்டியதின் விளைவு ஆகும். ஆனால் தலீபான் பயங்கரவாதிகள் மீது உள்நாட்டு படைகள் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி, அவர்கள் ஊடுருவதை தடுத்து வருகின்றனர்.