Image Courtesy: AFP 
உலக செய்திகள்

ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகள்: அமெரிக்கா, ஐரோப்பா முடிவு

ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

பாரீஸ்,

உக்ரைன் மீது போரை திணித்துள்ளதால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால் ரஷியா தளராமல் போரை நீட்டித்து வருகிறது.

இந்த நிலையில் வரும் நாட்களில் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் ரஷியாவுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதிக்கும், அவை எரிசக்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.

இதுபற்றி பிரான்ஸ் வெளியுறவுத்துறை செயலாளர் கிளமெண்ட் பியுன் அளித்த பேட்டியில், ரஷியாவுக்கு எதிரான புதிய தடைகளை விதிப்பது பற்றி அமெரிக்கா மற்றும் முக்கியமான ஐரோப்பிய நாடுகள் இடையே விவாதிக்கப்பட்டது. வரும் நாட்களில் ரஷியா மீது பொருளாதார தடைகள் பலப்படுத்தப்படும். இந்த கட்டுப்பாடுகள், எரிசக்தி வளங்களை அதிலும் குறிப்பாக எண்ணெய் வளத்தை பாதிக்கும் என்று தெரிவித்தார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?