அமெரிக்காவில் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்திருக் கிறார்கள். ஏனெனில் அங்கு ஆளில்லா ரோபோ வண்டியை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் மளிகை பொருட்களை சப்ளை செய்து வருகிறார்கள்.
குறிப்பிட்ட இணையதளத்திலும், மொபைல் ஆப்பிலும் நமக்கு தேவையான மளிகை பொருட்களை கிளிக் செய்தால் போதும், அனைத்து பொருட்களையும் வண்டியில் நிரப்பிக்கொண்டு நம்முடைய வீட்டிற்கே வந்துவிடுமாம், இந்த ஆளில்லா மளிகை வண்டி.
தற்போது ஆரம்பக்கட்ட பணிகளுக்காக ஒருசில நகரங்களில் மட்டுமே அறிமுகமாகி இருக்கும் இந்த ரோபோ மளிகை வண்டி, இவ்வருட இறுதியில் அமெரிக்கா முழுவதும் சுற்றிவரும்படி மும்முரம் காட்டுகிறார்கள்.