உலக செய்திகள்

ருவாண்டாவில் கனமழை, வெள்ளம்: 109 பேர் பலி

ருவாண்டா நாட்டில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

தினத்தந்தி

கிஹலி,

கிழக்கு ஆப்பிரிக்க அமைந்துள்ள நாடு ருவாண்டா. இந்நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக மாகாணத்தில் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளை பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ருவாண்டாவில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் சிக்கி 109 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மீட்புப்பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.  

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்