உலக செய்திகள்

உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க தயார் - ஹங்கேரி அறிவிப்பு

உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க தயாராக இருப்பதாக ஹங்கேரி அரசு தெரிவித்துள்ளது.

புடாபெஸ்ட்,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று போர் தொடுத்தது. அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் இன்று 2-வது நாளாகவும் நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். பெரும்பாலான மக்கள் உக்ரனை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.

உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை அழைத்துவர நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானம், உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால், டெல்லிக்கு திரும்பி வந்து விட்டது. உக்காரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது .

இந்த நிலையில் உக்ரைனில் இருந்து தப்பிச் செல்லும் ஈரான், இந்தியா போன்ற மூன்றாம் தரப்பு நாடுகளின் குடிமக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஹங்கேரிக்குள் நுழைய அனுமதி அளிப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது. விசா இல்லாமல் அவர்களை உள்ளே அனுமதித்து அருகிலுள்ள டெப்ரெசென் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் என்று ஹங்கேரி வெளியுறவு அமைச்சர் பீட்டர் ஸிஜ்ஜார்டோ தெரிவித்துள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்