உலக செய்திகள்

அமெரிக்காவில் விமானம் சுவரில் மோதி தீப்பிடித்தது; 4 பேர் சாவு

அமெரிக்காவில் விமானம் சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கோரோனா விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் விமானி உள்பட 4 பேர் இருந்தனர்.

விமானம் ஓடு பாதையில் இருந்து மேல் நோக்கி பறக்க தொடங்கிய சில நொடிகளில் திடீரென விமானியின் காட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமான நிலையத்தின் எல்லை சுவர் மீது விமானம் மோதி தீப்பிடித்தது.

பின்னர் தரையில் விழுந்த விமானம் முற்றிலுமாக எரிந்து உருகுலைந்து போனது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை