உலக செய்திகள்

சோமாலியாவில் அரசு படை அதிரடி தாக்குதல் - 8 பயங்கரவாதிகள் பலி

சோமாலியாவில் அரசு படை நடத்திய அதிரடி தாக்குதலில், 8 பயங்கரவாதிகள் பலியாகினர்.

மொகாதிசு,

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் பரவலாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி உயிர்ப்பலிகளை ஏற்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் அங்கு லோயர் ஜூபா பிராந்தியத்தில் ஜமாமி நகரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக படைகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து அங்கு ஜூப்பாலேண்ட் மற்றும் சோமாலியா சிறப்பு படைகள் நேற்று முன்தினம் விரைந்து முற்றுகையிட்டு அதிரடி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை எதிர்பாராத, பயங்கரவாதிகள் நிலை குலைந்து போயினர்.

இந்த தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளின் தளமும் நிர்மூலமாக்கப்பட்டது.

இதை அந்த நாட்டின் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை