உலக செய்திகள்

குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு - இம்ரான்கான் சொல்கிறார்

குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், குடியுரிமை திருத்த சட்ட போராட்டங்கள் குறித்து டுவிட்டரில் நேற்று தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து, பன்முக இந்தியாவை விரும்புகிற இந்தியர்கள் போராட தொடங்கி உள்ளனர். இது மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி உள்ளது. போராட்டங்கள் அதிகரித்து வருகிற நிலையில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. உள்நாட்டு பிரச்சினையில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஏதாவது நடவடிக்கை எடுத்தால், பாகிஸ்தான் உரிய பதிலடி தருவதைத் தவிர வேறு வழி இல்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு