உலக செய்திகள்

தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது -ஐ.நா.

தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது என ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள்

இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே இந்த மாத துவக்கத்தில் இருந்து பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லையில் சீனாவின் போர் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. அதன் பின் சிக்கிம் எல்லையில் சீனாவின் படைகள் அத்து மீறியது.

இதனால் இரண்டு எல்லையிலும் சீனா மற்றும் இந்திய படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக தற்போது இரண்டு நாடுகளும் தங்கள் எல்லையில் படைகளை குவித்து வருகிறது.

அதுமட்டுமின்றி, போருக்கு தயாராக இருக்கும் படி தன் நாட்டு இராணுவத்திற்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்ததால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதன்கிழமை டுவிட்டர் மூலம் தெரிவித்தார்.

இந்த நிலையில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது என ஐ.நா. பெதுச் செயலாளர் வேண்டுகேள் விடுத்துள்ளார்.

இந்தியாவும், சீனாவும் சர்வதேச எல்லைக்கேட்டு அருகே படைகளை குவித்து வருவதால் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த பிரச்சினையில் யார் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதை ஐ.நா. பெதுச் செயலாளர் தீர்மானிக்க முடியாது என அவரது செய்தித் தெடர்பாளர் கூறியுள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை