உலக செய்திகள்

ஈரானில் போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது: விமானியின் கதி என்ன?

ஈரானில் போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில், அதில் பயணம் செய்த விமானியை தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

டெஹ்ரான்,

ஈரானின் வடமேற்கு பகுதியில் அஜர்பைஜன் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள அர்டாபில் மாகாணத்தில் இருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான மைக்கோயன் மிக் 29 ரக போர் விமானம் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு விமானி மட்டும் இருந்தார்.

புறப்பட்டு சென்ற சிறிது நேரத்துக்கு பிறகு இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. இதில் அந்த விமானம் அர்டாபிலில் உள்ள சபாலான் மலைப்பிரதேசத்துக்கு அருகே தரையில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. ஆனால் விமானத்தில் இருந்த விமானியின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

மீட்பு குழுவினர் 3 ஹெலிகாப்டர்களில் சென்று விபத்துக்குள்ளான விமானத்தையும், விமானியையும் தேடி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்