உலக செய்திகள்

பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல்

இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

தினத்தந்தி

தெஹ்ரான்,

இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஜுன் மாதம் போர் மூண்டது. 12 நாட்கள் நடைபெற்ற இப்போரில் இஸ்ரேலில் 32 பேரும், ஈரானில் 1,060 பேரும் உயிரிழந்தனர். இந்த போரை தொடர்ந்து மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அசிஸ் நசீர்சாடிஸ் கூறுகையில், ஈரான் ராணுவத்திற்கு ஏவுகணை உற்பத்தி செய்வது முக்கிய பணியாக உள்ளது. இஸ்ரேலுடனான போருக்குப்பின் முன்னுரிமைகள் மாறிவிட்டன. பல நாடுகளில் ஈரான் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளது. அந்த தொழிற்சாலைகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்றார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?