உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தல்: பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ வெற்றி பெற்றதாக தகவல்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தினத்தந்தி

ஜெருசலேம்,

120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். மக்கள் ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியதால் தேர்தலில் விறுவிறுப்பான வாக்கு பதிவு நடந்தது.

நேற்று பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேட்டயன்யாஹூ கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. 96 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் வலதுசாரி கட்சியான லிகுட் கட்சி 37 இடங்களை கைப்பற்றியதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மையவாத நீல வெள்ளை கூட்டணியின் தலைவரான ஓய்வுபெற்ற ஜெனரல் பென்னி கான்ட்ஸ் கட்சி 36 இடங்களில் வென்றதாக செய்திகள் வந்துள்ளன. வலதுசாரி அமைப்புகள் ஆதரவுடன் கூட்டணி அரசை பெஞ்சமின் நேட்டன்யாஹூ அமைக்க உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதன் மூலம், பெஞ்சமின் நேட்டன்யாஹூ 5-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் நீடிக்கும் பெஞ்சமின் நேட்டன்யாஹூவே நீடித்து வருவது கவனிக்கத்தக்கது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்