கோப்புப்படம் 
உலக செய்திகள்

இத்தாலியில் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 13,720 பேருக்கு தொற்று உறுதி

இத்தாலியில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.4 லட்சத்தைக் கடந்துள்ளது.

தினத்தந்தி

ரோம்,

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் சில நாடுகளில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டி உள்ளது. அவர்களில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி 6-வது இடத்தில் உள்ளது

இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 13,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17,42,557 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 528 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60,606 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இத்தாலில் 7,48,819 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தாலியில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் வீசிய கொரோனா தொற்றின் 2-வது அலையால், தற்போது அங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்