உலக செய்திகள்

ஈக்வடாரில் பயங்கர நிலச்சரிவு: 16 பேர் பலி

ஈக்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 16 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

குயிடோ,

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈக்வடார். இந்நாட்டின் சிம்பொரொசா மாகாணம் அலுசி கன்டோன் நகரின் மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் சிக்கின. இந்த நிலச்சரிவு குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த நிலச்சரிவால் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், நிலச்சரிவில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈக்வடாரில் கடந்த 19-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு