தெஹ்ரான்,
ஈரான் நாட்டின் தென்கிழக்கே கெர்மன் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இதுபற்றி ஈரான் நாட்டு நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், நிலநடுக்க பகுதிகளில் மீட்பு குழுவினர் சென்றுள்ளனர். அங்கு எந்தவித உயிரிழப்போ அல்லது சேதம் ஏற்பட்டது பற்றியோ தகவல் எதனையும் அவர்கள் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளது.