உலக செய்திகள்

சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்; 15 பேர் பலி

சோமாலியா நாட்டில் வெடிகுண்டுகளை ஏற்றி வந்த கார் ஒன்று சாலையில் வெடிக்க செய்யப்பட்டதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

மொகதிசு,

சோமாலியா நாட்டில் ஆளும் அரசை நீக்கி விட்டு இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி செய்ய அல் ஷபாப் தீவிரவாத குழு முயற்சி செய்து வருகிறது. அல் கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இந்த குழுவானது பல வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், மொகதிசு நகரில் உள்ள மக்கா அல் முக்காரமா என்ற சாலையில் வெடிகுண்டுகளை ஏற்றி கொண்டு கார் ஒன்று வந்தது. அது திடீரென வெடிக்க செய்யப்பட்டது. இதில் 15 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்த பகுதியில் ஓட்டல்கள், கடைகள் மற்றும் விடுதிகள் உள்ளன. இந்த சம்பவத்தினால் அங்கிருந்த கட்டிடங்கள் மற்றும் 12க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து வருகின்றன. மொகதிசு நகரில் வேறு இரு குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது. இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாத குழு பொறுப்பேற்றுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்