உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மசூதியில் துப்பாக்கி சூடு; ஒரே குடும்பத்தின் 8 பேர் படுகொலை

ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரில் மசூதி ஒன்றில் நேற்றிரவு 9 மணியளவில் புகுந்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், ஒரே குடும்பத்தினை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர்.

இதனை மாகாண கவர்னர் ஜியா உல் ஹக் அமர்கெல் உறுதிப்படுத்தி உள்ளார். முதற்கட்ட விசாரணை முடிவில், ஹாஜி அப்துல் வஹாப் என்பவரின் 5 மகன்கள் மற்றும் 3 உறவினர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. தனிப்பட்ட பகையால் அவர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

எனினும், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்று கூறியுள்ளார். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். நேற்று முன்தினம் மாலையில், ஹெராத் மாகாணத்தின் ஜிண்டாஜன் மாவட்டத்தில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு