உலக செய்திகள்

அமெரிக்க பொருளாதார தடைகளை சமாளிக்க சீனாவில் புதிய சட்டம் அமல்

அமெரிக்க பொருளாதார தடைகளை சமாளிக்க சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியது.

தினத்தந்தி

பீஜிங்,

சீனாவுடன் பல்வேறு விவகாரங்களில் முரண்பட்டு நிற்கும் அமெரிக்கா அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்தார்.

இதையடுத்து பல சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தங்களது நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் சீனா புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.

இதுகுறித்து சீன வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியாயப்படுத்த முடியாத வெளிநாட்டு சட்டங்களை அமல்படுத்துவதில் இருந்து நிறுவனங்களை பாதுகாக்கும் விதமாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி வெளிநாட்டு சட்டங்களால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் கோர்ட்டில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அத்துடன் சேதத்துக்கு இழப்பீடு கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்