உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுநோயை கையாளும் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம்,குழப்பமான பேரழிவை ஏற்படுத்தி விட்டது- ஒபாமா குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் தொற்றுநோயை கையாளும் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம், முற்றிலும் குழப்பமான பேரழிவை ஏற்படுத்தி விட்டதாக முன்னாள் ஜனாதிபதி ஒபாமா குற்றம்சாட்டினார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, தன்னோடு வெள்ளை மாளிகையிலும், தனது நிர்வாகத்திலும் பணியாற்றியவர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு தொலைபேசி வழியாக உரையாடி உள்ளார்.

அப்போது அவர் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கையாளும் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம், முற்றிலும் குழப்பமான பேரழிவை ஏற்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டினார்.

மேலும், கொரோனா வைரஸ் பரவலுக்கு டிரம்ப் நிர்வாகத்தின் மோசமான தடுப்பு நடவடிக்கை, உலகளாவிய நெருக்கடியின்போது அரசாங்கத்துக்கு ஒரு வலுவான தலைமை ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான முக்கிய நினைவூட்டலாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரசுக்கு எதிராக டிரம்ப் எடுத்து வந்துள்ள நடவடிக்கையில் ஊசலாட்டத்தை காண முடிந்ததாக ஒபாமா சுட்டிக்காட்டி உள்ளார்.

கொரோனா வைரஸ் மறைந்து விடும் என்று டிரம்ப், பிப்ரவரி மாதம் கூறியதாகவும், மார்ச் மத்தியில், இது ஒரு தீவிர பிரச்சினை என ஒப்புக்கொண்டதாகவும், ஒரு சிறந்த அரசாங்கம் இருந்திருந்தால்கூட கொரோனா வைரஸ் விவகாரம் மோசமாகத்தான் இருந்திருக்கும் எனவும் ஒபாமா குறிப்பிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்