உலக செய்திகள்

மே 11 முதல் மும்பை -கராச்சி விமான சேவையை நிறுத்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முடிவு

மே 11 ஆம் தேதி முதல் மும்பை -கராச்சி விமான சேவையை நிறுத்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மும்பை- கராச்சி இடையே வாரத்தில் ஒருநாள் இயக்கப்படும் சர்வதேச விமானத்தை மே 11 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது. மே 11 ஆம் தேதிக்கு பிறகு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் எந்த முன்பதிவையும் மேற்கொள்ளவில்லை. விமான சேவை எதனால் நிறுத்தப்படுகிறது என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

எனினும், அண்மைக்காலமாக இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவில் அதிகரித்துள்ள பதட்டத்தினால் மட்டும் அல்லாது வணிக ரீதியிலும் இத்தகைய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் மும்பை- கராச்சி செல்லும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு