வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா மூன்று நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு பின்லாந்தில் இருந்து நாடு திரும்ப திட்டமிட்டுள்ளார். அவரை அழைத்து வர வங்காளதேசத்தில் இருந்து சிறப்பு விமானம் சென்றது.
விமானம் கத்தார் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விமானியிடம் பாஸ்போர்ட் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை திரும்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே வங்கதேச அரசு அவருடைய பாஸ்போர்ட்டை கத்தாருக்கு அனுப்பியது. ஷேக் ஹசினாவை அழைத்துவர மற்றொரு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்தது. அந்த விமானம் பின்லாந்து நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. இவ்விவகாரத்தில் விசாரணையை மேற்கொண்டு விமானியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.