உலக செய்திகள்

நடை பயிற்சிக்கு சென்றபோது அடித்த அதிர்ஷ்டம்; நாய் கவ்விய லாட்டரி சீட்டுக்கு பரிசு

நடை பயிற்சிக்கு சென்றபோது உடன் அழைத்துச்செல்லப்பட்ட நாய், கவ்விப்பிடித்த லாட்டரிக்கு பரிசு விழுந்த ஆச்சரியம் நடந்துள்ளது.

தினத்தந்தி

பெய்ஜிங்,

தெற்கு சீனாவின் குவாங்டாங் நகரில், நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார் லின் என்ற பெண். அவர் கையில் பிடித்திருந்த நாய், ஒரு கடைக்கு அருகே வந்தபோது திடீரென எஜமானரின் பிடியில் இருந்து நழுவி கடைக்குள் ஓடியது. அங்கு வைக்கப்பட்டிருந்த லாட்டரி டிக்கெட் ஒன்றை கவ்விப்பிடித்தது. இதையடுத்து அவர் அதை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இறுதியில் அந்த சுரண்டல் லாட்டரிக்கு 139 டாலர் பரிசு விழுந்திருந்தது. இதனால் லின் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதனால் மறுநாள் அவராகவே தனது நாயை மீண்டும் கடைக்கு அழைத்துச்சென்று ஒரு லாட்டரியை கவ்வச்செய்தார். இந்த முறை அவருக்கு 4 டாலர் பரிசு விழுந்தது. அதிர்ஷ்டத்தை தேடித்தந்த நாய்க்கு பரிசுத்தொகையில் ஒரு பகுதிக்கு உணவு வாங்கிக் கொடுத்ததாக கூறினார் லின்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு