உலக செய்திகள்

ஐநாவில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: அமெரிக்க பிரநிதிகள் சபையில் ஆதரவு தீர்மானம் தாக்கல்

ஐநாவில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க ஆதரவாக அமெரிக்க பிரநிதிகள் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிப்பதற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பிரநிதிகள் சபையில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை இந்திய வம்சாவளியைச்சேர்ந்த பிரநிதி உட்பட இரண்டு செல்வாக்கு மிக்க ஜனநாயக கட்சியைசேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

முன்னதாக ஏற்கனவே, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கின்றன. இதர 10 நாடுகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைத்து விரிவுபடுத்த வேண்டும் என்று மிக நீண்டகாலமாக வலியுறுத்தப் பட்டு வருகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்