மாஸ்கோ
தனது இணையதளத்தில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் புதிய அமெரிக்க அபராதங்கள் குறுகிய நோக்கம் கொண்டவை என்றும், உலகின் நிலைத்ததன்மைக்கு கெடுதல் விளைவிக்கும் இடர்ப்பாடுகளைக் கொண்டவை என்றும் கூறியுள்ளது. ரஷ்யா மீதான அச்சுறுத்தல்களும், அதன் மீது தொடுக்கப்படும் அழுத்தங்களும் தனது தேசிய நலன்களை தியாகம் செய்வதையோ அல்லது அதன் பாதையை மாற்றியமைக்கவோ செய்யாது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ரஷ்ய பிரதமரின் மிரட்டல்
அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் முழுமையான வர்த்தக ரீதியிலான போர் ஒன்றை துவக்கும் என்று மிரட்டியுள்ளார் ரஷ்ய பிரதமர் மெத்வதேவ்.
ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் அவர் இத்தடைகள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் முற்றிலும் அதிகாரமற்று காணப்படுவதைக் காட்டுகிறது என்றுள்ளார். புதிய அமெரிக்க நிர்வாகத்தின் மூலம் இரு நாட்டு உறவு மேம்படும் என்ற நமது நம்பிக்கை முடிவிற்கு வந்துவிட்டது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.