கோப்புப்படம் 
உலக செய்திகள்

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,741 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 37,74,672 ஆக உயர்ந்துள்ளது.

மாஸ்கோ,

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 10.08 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 21.68 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 17,741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 37,74,672 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 594 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 076 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 32,02,483 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5,01,113 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை