உலக செய்திகள்

அணு ஆயுத சோதனையில் சீனா தீவிரம்: அமெரிக்க ஆய்வாளர் தகவல்

அணு ஆயுத சோதனையில் சீனா தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

சீனா தனது புதிய அணு ஏவுகணைகளை பூமிக்கு அடியில் இருந்து ஏவுவதற்கான திறனை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாகவும், இது அணு ஆயுத தாக்குதலுக்கு உடனடியாக பதிலளிக்கும் திறனை மேம்படுத்தும் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அணுசக்தி கண்காணிப்பு குழு நிபுணர் ஹான்ஸ் கிறிஸ்டென்ஷன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் அணு ஆயுத செயல் திட்டங்களை கண்காணித்து வரும் ஹான்ஸ் கிரிஸ்டென்ஷன், செயற்கைகோள் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்து மேற்கூறிய தகவலை வெளியிட்டுள்ளார்

மேலும், சீனா அணு ஆயுத தளங்களை நவீனப்படுத்துவதை அறிந்து, அமெரிக்காவும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை மேம்படுத்த உள்ளதாகவும், எனினும் இரு நாடுகளுக்கு இடையே மோதலை நோக்கி செல்வதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்