உலக செய்திகள்

பாகிஸ்தானில் பாதுகாப்பு படை என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

பாகிஸ்தானின் வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

லாகூர்,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவில் வடக்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில் உளவு தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்தது.

கடந்த புதன்கிழமை தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தானிய வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் மீது நடந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-ஐ-தலீபான்கள் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை