உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் அறிவிப்பு

புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலீஜ் டைம்ஸ் செய்திவெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபரான ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே அலுவல் பணிகளை கவனித்து வந்தார்.

இந்த நிலையில், அதிபர் ஷேக் கலீபா நேற்று மதியம் அபுதாபி அதிபர் அரண்மனையில் காலமானார். அவருக்கு வயது 73. இவரது மறைவை அடுத்து ஓமன், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலீஜ் டைம்ஸ் செய்திவெளியிட்டுள்ளது. 61-வயதான ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் 3-வது அதிபராக உள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு