உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 250 பேர் பலி என தகவல்

அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் 400க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

தினத்தந்தி

காபுல்,

ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 11:47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் எல்லை அருகே அமைந்துள்ள அந்நாட்டின் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இரவு மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. அடுத்தடுத்து 2 நிலநடுக்கத்தால் நகங்கர் மாகாணத்தில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி மற்றும் சபதரே மாவட்டங்களில் குறைந்தது 250 பேர் பலியானதாகவும், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் குனார் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆழமற்ற நிலநடுக்கங்கள் அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கதால் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்