உலக செய்திகள்

வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள நவீன எந்திரம்...! சுவிட்சர்லாந்து அரசு அனுமதி

சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள நவீன எந்திரத்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது.

தினத்தந்தி

ஜெனீவா,

எந்திரமயமாகிவிட்ட இந்த உலகில் மனிதனின் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு எந்திரங்களை கண்டுபிடிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால் மனிதன் தனது வாழ்க்கையை முடித்து கொள்வதற்கு கூட ஒரு எந்திரந்த்தை கண்டுபிடித்திருப்பது சற்று வியப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆம், சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக நவீன எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால் அந்த எந்திரத்தை பயன்படுத்த அந்த நாட்டு அரசே ஒப்புதல் வழங்கியுள்ளதுதான். சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானதாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக்கொலை அமைப்புகளின் சேவைகளின் மூலம் தற்கொலை கொண்டதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான் டாக்டர் டெத் என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும் டாக்டருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான எந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற இந்த எந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.

தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நபர்கள் இந்த எந்திரத்தின் உள்ளே சென்று படுத்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தியதும் ஒரே நிமிடத்தில் உயிர் பிரிந்துவிடுமாம்..?!! அடுத்தாண்டு முதல் இந்த எந்திரம் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு