உலக செய்திகள்

நியூசிலாந்தில் பயங்கரம்: விமானங்கள் நேருக்கு நேர் மோதல்; 2 விமானிகள் பலி

நியூசிலாந்தில் விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 விமானிகள் பலியாயினர்.

தினத்தந்தி

வெலிங்டன்,

நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாஸ்டர்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி தவிர பயணிகள் இல்லை.

அதே வேளையில் மற்றொரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று மாஸ்டர்டன் விமான நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது. இந்த விமானத்திலும் விமானி தவிர பயணிகள் இல்லை.

இந்த 2 விமானங்களும் விமான நிலையத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் 2 விமானங்களிலும் தீப்பிடித்தது.

பின்னர் அந்த விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கின. இந்த கோர விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்