உலக செய்திகள்

கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி; வாட் வரியை 3 மடங்கு உயர்த்துகிறது சவுதி அரேபியா

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய சவுதி அரேபியா வாட் வரியை 3 மடங்கு உயர்த்துகிறது.

ரியாத்,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலிகளை ஏற்படுத்தி வரும் அதேவேளையில், உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் சரிவடையச் செய்துள்ளது.

உலகம் முழுவதும் தொழில்துறைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளதால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் சவுதி அரேபியா பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் சவுதி அரேபியாவின் பட்ஜெட்டில் 9 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.68 ஆயிரத்து 157 கோடி) பற்றாக்குறை விழுந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரிசெய்ய மதிப்பு கூட்டு வரி (வாட் வரி) 3 மடங்கு உயர்த்தப்படுவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

அதன்படி வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் பொருட்கள் மீதான வாட் வரி 5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதத்துக்கு உயர்த்தப்படும் என நிதி மந்திரி முகமது அல் ஜாதான் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதி சலுகைகள் ஜூன் மாதத்தில் இருந்து நிறுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை