Image Courtesy: AFP 
உலக செய்திகள்

பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானின் புதிய பிரதமர் கொடுத்த 'முதல்' உறுதி

பாகிஸ்தானின் 23வது பிரதமராக ஷெபாஸ் ஷரீப் பொறுப்பேற்றுள்ளார்.

தினத்தந்தி

கராச்சி,

இந்தியாவுடன் அமைதியான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் 23வது பிரதமராக ஷெபாஸ் ஷரீப் பொறுப்பேற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார். அதற்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்த ஷெபாஸ் ஷரீப், இந்தியாவுடன் அமைதி மற்றும் ஒத்துழைப்பை பாகிஸ்தான் விரும்புவதாகவும், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுவது இன்றியமையாதது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமைதியை காக்கவும், சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்